vettuvarpadai feb 2013

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

வியாழன், 28 பிப்ரவரி, 2013

vettuvarpadai

சனி, 17 நவம்பர், 2012

பைன் பியூச்சர் வெளிமாநிலத்துக்கு தப்பிஓட்டம்

ஈமுவை தொட‌ர்‌ந்து பைன் பியூச்சர், மேக்ஸ்புரோ ஆன்லைன் நிறுவன முகவ‌ர்க‌ள் வெ‌ளி மா‌நில‌ங்களு‌க்கு எஸ்கேப் ஈரோடு மாவட்டத்தில் பைன் பியூச்சர் மற்றும் மேக்ஸ்புரோ உள்ளிட்ட பெயர்களிடம் நடந்த ஆன்லைன் மோசடியில் முகவர்களாக செயல்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் கர்நாடகா மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சென்று குடியேறிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக ஈரோடு, கோயமுத்தூர் மாவட்டத்தில் ஈமு கோழி மற்றும் பைன் ஃபியூச்சர், மேக்ஸ்புரோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் ஒரு லட்சம் ரூபாயிக்கு மாதம் ரூ.8500 வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள். இதில் ஆன்லைன் நிறுவனங்கள் பணம் வசூல் செய்ய பல்வேறு முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு லட்ச‌கணக்கில் ஊக்க‌த்தொகை மற்றும் புது, புது மாடல் கார்களும் அளித்தனர். இதனால் ஒவ்வொரு முகவர்களும் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களிடம் மூலைசலவை செய்து அவர்களிடம் இருக்கும் பணம் பணம் இல்லாதவர்களிடம் நிலத்தின் பத்திரத்தை அடகு வைத்து அந்த பணத்தில் முதலீடு செய்ய சொல்லி ஆலோசனை வழங்கியதில் சத்தியமங்கலம் மற்றும் புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் பகுதியில் இருந்து பல லட்சங்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஈமு கோழி மோசடி அம்பலமாகி அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது பைன் பியூச்சர் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பணம் முதலீடு செய்த பொதுமக்கள் தங்கள் முகவர்களிடம் சென்று பணத்தை திருப்பி கொடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நொச்சிக்குட்டையை சேர்ந்த மகேஸ்வரி என்ற முகவரின் கணவர் வேலுச்சாமி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் பிரச்சனைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல முகவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் அப்பா, அம்மாவுடன் தாங்கள் வைத்திருந்த கால்நடைகள் மற்றும் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு நேரங்களில் ஊரை காலி செய்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் எளிதில் சென்று அடையாளம் தெரியாத பகுதியில் சென்று குடியேறியுள்ளதாக தற்போது இவர்களை நம்பி பணம் முதலீடு செய்தவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிலர் வெளிமாநிலம் சென்று தேடிபார்த்து கண்டுபிடிக்க முடியாமல் சோகத்தோடு திரும்பியுள்ளனர். சிலர் அவர்களுடைய உறவினர்களிடம் இந்த முகவர்கள் பற்றிய தகவல்கள் வெளிமாநிலங்களில் இருக்கும் அவர்களின் உறவினர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர்.